மட்டு. விபுலானந்தா இசை,நடனக்கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் இ.தட்சணாமூர்த்தியை கௌரவிக்கும் நிகழ்வு

0
57

மட்டக்களப்பு விபுலானந்தா இசை,நடனக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றி ஓய்வுபெற்ற அதிபர் திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தியைக் கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இன்று நடைபெற்றது.
விபுலானந்தா இசை நடனக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தமது திறமையினாலும் ஆற்றலினாலும் பெருமளவான கல்வியியலாளர்களை உருவாக்கியமையினை கௌரவிக்கும் முகமாக, ‘வாழும் போதே வாழ்த்துவோம்’ என்னும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் ஏற்பாடு; செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வானது, பழைய மாணவியும், பட்டிருப்பு கல்வி வலய இசைத்துறை சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான
டேசிராணி இராஜகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் பொதுமுகாமையாளர் ஸ்ரீPமத் நீலமாதவானந்தா ஜி மகராஜ் சுவாமி கலந்து கொண்டார்.
கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் மா.செல்வராஜா மற்றும் சிறப்பு அதிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
சுவாமி விபுலானந்தரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தியினைக் கௌரவிக்கும் வகையில் பழைய மாணவர்களினால் பாதபூஜை செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.