25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மதம் மாறுவதற்கு அனுமதி அவசியம்!

குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி வெளியிட்ட சுற்றறிக்கையில் பௌத்தம், சீக்கியம் மற்றும் சமணம் ஆகியவை தனி மதங்கள் என்றும் இந்துவாக இருந்து இந்த மதங்களுக்கு மாற விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

குஜராத் மத சுதந்திர சட்டத்தின் கீழ் மதம் மாறுவதற்கு அனுமதி அவசியம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக குஜராத் உள்துறை அமைச்சகம் சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறுவது தொடர்பான விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் பௌத்த மதத்திற்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் மதம் மாறுவது தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது குஜராத் மத சுதந்திர சட்டத்தில் ஆட்சியர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பங்களுக்கு சில மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், “சட்ட விதி 25 பிரிவு 2-இன் கீழ் சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இந்து மதத்திற்குள் இடம்பெற்று இருப்பதால் மதம் மாறுவதற்கான அனுமதி பெற தேவையில்லை,” என கோரி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும், குஜராத் மத சுதந்திர சட்டத்தின் படி இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களுக்கு மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles