மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

0
95

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கீரிகம பகுதியில் நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குருவிட்ட, கீரிகம பகுதியைச் சேர்ந்த 59 வயது நபராவார்.

மது போதையிலிருந்த நபரொருவர் உயிரிழந்தவரது வீட்டிற்கு முன் சென்று தீப்பெட்டியொன்று கேட்டுள்ள நிலையில் தீப்பெட்டியை வழங்கத் தாமதமானதால் குறித்த நபர் உயிரிழந்தவரது வீட்டார்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். உயிரிழந்த நபரான வீட்டின் உரிமையாளர் , இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனச் சந்தேக நபரிடம்  கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் வீட்டின் உரிமையாளரைத் தாக்கியுள்ள நிலையில் காயமடைந்தவர் திடீரென மயங்கி தரையில் வீழ்ந்துள்ளார். பின்னர் இவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.