பெல்மதுல்ல படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற இவ்வருட புதுவருட கொண்டாட்ட நிகழ்வின்போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தனது மகனிற்கு ஆதரவளிக்கச் சென்ற தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது 16 வயதுடைய மகன் மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட போது தனது மகனை உற்சாகப்படுத்தி ஆதரவளிப்பதற்காக அவருடன் இணைந்துஇவரும் ஓடியுள்ளார்.
இந்நிலையில் இவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து பெல்மதுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெல்மதுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவராவார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பெல்மடுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.