மறைந்த பிரான்ஸ் தூதுவருக்கு கொழும்பில் அஞ்சலி நிகழ்வு

0
64

இலங்கைக்கான மறைந்த பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிராங்கோயிஸ் பேக்டெட்டின் (Jean-Francois Pactet) அஞ்சலி நிகழ்வு கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சென். மேரிஸ் தேவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை இடம்பெற்றது.

இலங்கையின் அப்போஸ்தலிக்க தூதுவர் வணக்கத்திற்குரிய பிரையன் உதய்க்வே  அஞ்சலி நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.