நாடளாவிய ரீதியில் நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுத்தப்படமாட்டாது.
நாளை பௌர்ணமி தினத்தை முன்னிட்டும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி A முதல் W வரையான வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை யில் ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.