முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள், இன்று, ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், அகழ்வுப் பணிகளை பார்வையிட்டார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினால், பணி முன்னெடுக்கப்பட்டது.
இதில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்து கொண்டனர்.