முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஒளிவிழா நிகழ்வு!

0
129

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் 2022ம் ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வுகள் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஜே. வோல்டி சொய்சா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் வருகைப்பாடல் இசைக்கப்பட்டதை தொடர்ந்து யேசு பாலனை அருட்தந்தை யோன்சன் கையில் ஏந்தி தொழுவத்தில் வைத்தார். அதனைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் தீப ஒளியேந்தி விழாவை ஆரம்பித்தனர். இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், மழலைகளின் கலை நிகழ்வுகள், உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்கள், நாடங்கள் போன்ற பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் வடமாகாண இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஆ.ஜேசுறெஜினோல்ட், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா, மல்லாவி பங்குத்தந்தை யோன்சன் அடிகளார், மாந்தை கிழக்கு உதவி பிரதேச செயலாளர் ஆ.ஜெபமயூரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.