27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மைத்திரிபால சிறிசேனவால் ரிட் மனு தாக்கல்: மேன்முறையீட்டு நீதிமன்று பிறப்பித்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கொழும்பு கோட்டை நீதிமன்றம் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தனக்கு விடுத்துள்ள அறிவிப்பை நிராகரிக்கும்படி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி அவர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையின் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டவர்கள், பொலிசார் உட்படக் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles