நாட்டின் பல்வேறு பகுதிகளில், அலைபேசி அழைப்புகள் செய்தும், பொலிஸ் அதிகாரிகள் போல் வேடமணிந்தும் மக்களை ஏமாற்றி, பணம் பறிக்க முற்படும் கும்பல் ஒன்று திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பொய்யாகக் கூறி பணம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தொடர்பில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்முல்லேரியா மற்றும் நவகமுவ பிரதேசங்களில் உள்ள வீடுகளிலுள்ள லேண்ட்லைன்களை குறிவைத்து இந்த அழைப்புகள் வந்துள்ளன. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் மற்ற பகுதிகளுக்கும் இது போன்ற அழைப்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பொலிஸ் அதிகாரிகளாக வேடமிட்டு ஆள்மாறாட்டம் செய்பவர்கள் குறிப்பிட்ட சில சம்பவங்களில் ஈடுபட்டதாக குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். குற்றச் செயல்கள் மற்றும் தொடரும் பொலிஸ் விசாரணைகள்.ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் சஹாரன் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அப்பகுதிவாசிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அச்சுறுத்தும் .இந்த ஆசாமிகள் குறித்த சட்ட நடவடிக்கையை தடுப்பதாக கூறி பணம் பறிக்க முற்பட்டுள்ளனர். இதுபோன்ற அழைப்புகளைப் பெற்ற பல குடியிருப்பாளர்கள் மோசடி செய்பவர்களுக்கு ez cash மூலம் பணத்தை அனுப்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.இதுபோன்ற முயற்சிகளுக்கு பலியாகாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்ட அவர், தனிநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் ஒருபோதும் அழைப்பு விடுக்க மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.