யாழ். பருத்தித்துறையில் நடமாடும் சேவை

0
177

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156ஆவது தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிசாரால் நடமாடும் மருத்துவ சேவை நடாத்தப்பட்டுள்ளது. குடத்தனை வடக்கு அ.மி.த.க பாடசாலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட வழிகாட்டலில், பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த சமரசிங்க தலைமையில் நடமாடும் சேவை இடம்பெற்றது. இதில் பொது மருத்துவம், கண் பரிசோதனை, கண்ணாடி வழங்கல் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகள், குடத்தனை மணல்காடு மற்றும் அயல் கிராம சேவகர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.