யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின், ஐந்தாம் வருட விழா நிறைவு நிகழ்வு, இன்று இடம்பெற்றது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரன, யாழ். மருத்துவ சங்கத் தலைவர் சுதர்சன், அரச மருத்துவ சங்க உப தலைவர் எஸ்.மதிவாணன், தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் மற்றும் தாதியர்கள் என பலர் பங்கேற்றனர்.


