யாழ். மாதகல் பகுதியில் முரல் மீன் திருவிழா!

0
343

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் முரல் மீன்படுகை அதிகரித்த காலமாக இம்மாதம் காணப்படுகின்ற நிலையில் முரல் மீன் விற்பனை அதிகரித்து மாதகல் மேற்கு கடற்கரை இரவு நேரங்களில் விழாக்கோலம் கொண்டு காணப்படுகின்றது.

மாதகல் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்ற முரல் மீன் தனித்துவமானதும் சுவை வாய்ந்ததுமாக காணப்படுகின்ற நிலையில் அதிகளவானவோர் குறித்த கடற்பரப்பிற்கு வருகை தந்து படகுகளில் பிடித்து வரப்படும் மீனை உடனடியாகவே கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஒரு மீன் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாண சுற்றுலா பணியகம் இக்காலப் பகுதியை மாதகல் பகுதியின் சுற்றுலாவிற்கு உகந்த காலமாக அடையாளபடுத்தியுள்ளது.