யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0
165

யுக்திய  நடவடிக்கையின் போது இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருகோணமலை குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று (10) குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் 2021 செப்டெம்பர் மாதம் பொலிஸ் சேவையில் இணைந்து, அடிப்படை பயிற்சியை முடித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

 விடுமுறையில் சென்றிருந்த அவர், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி பணிக்கு மீண்டும் திரும்பாமல் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (11) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 23 பேர் தொடர்பில் தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைக்கு அடிமையான 19 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகளின் போது 295 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின், 685 கிராம் 930 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 665 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.