30 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யுக்ரைனுக்கு கண்ணிவெடிகளை வழங்க பைடன் ஒப்புதல்!

யுக்ரைனுக்கு கண்ணிவெடிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பி.பி.சி. இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.இதன்படி விரைவில் யுக்ரைனுக்கு கண்ணிவெடிகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகளில் குறித்த கண்ணிவெடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் யுக்ரைன் உறுதியாகயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வரும் ரஷ்யப் படையினரைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவது பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதைக் கடந்த காலங்களில் தடுத்திருந்தது.எனினும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கு முன்னர் யுக்ரைனின் போர் முயற்சியை வலுப்படுத்துவதற்கு தற்போதைய அமெரிக்க அரசாங்கம் முயல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles