இலங்கை அணுசக்தி வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையில்இ இந்தியாஇ ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு பல்வேறு தொழில்நுட்பங்களின் கீழ் அணுமின் நிலையங்களை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை அணுசக்தி தெரிவுகளை ஆராய்ந்து வருவதாகவும் இந்த நாடுகளின் சலுகைகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘2023-2042 மின் உற்பத்தி திட்டத்தில் அதை இணைக்கும் திட்டங்களுடன்இ அணுசக்தி விருப்பங்களை ஆராய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு விரிவான மதிப்பீடு நமது நாட்டிற்கான அணுசக்தியின் பொருத்தம் மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும், மேலும் அதற்கேற்ப அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும்இ ‘என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.