தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்காக, பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு – கோட்டை ஜனாதிபதி செயலகம் வரை பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பேரணி தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும் என கொம்பனித்தெரு பொலிஸ் நீதிமன்றத்தை கோரியிருந்தது. அந்தக் கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், குறித்த இருவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.