வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் 14 வது வருட நிறைவு நிகழ்வு

0
111

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் திட்டங்களின் 14 வது ஆண்டுநிறைவு நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில்
நடைபெற்றது.
வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் அருட்தந்தை பிரபஹாஸ் ரெட்டி தலைமையில் இடம் பெற்ற
நிகழ்வில் விருந்தினர்களாக, வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் ஜோசப் மனோ இமானுவேல்பிள்ளை, பொருளாளர் சகு இமானுவேல்பிள்ளை,
மாகாண பணிப்பாளர் அருட்தந்தை அமலன், தனாமுனை மியானி நிலையப் பணிப்பாளர் அருட்தந்தை மகிமைதாஸ் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள்,அருட் சகோதரிகள்,
என பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை கலாச்சார நடன நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.