வவுனியா நகரப்பகுதிக்குள் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை (12) அதிகாலை தவசிகுளம் – தோணிக்கல் வழியாக யானை நகருக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
யானை, தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியதுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் துவம்சம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் தோணிக்கல் வீதியூடாக நகரத்தை அடைந்த யானை, தினச்சந்தைக்கு பின்புறமாக அமைந்த வவுனியா குளத்தில் இறங்கியுள்ளது. இதன்போது அருகிலிருந்த சில கட்டடங்களின் சுவர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
தற்போது, யானை பலமணிநேரமாக குளத்தில் வெளியேவரமுடியாமல் தத்தளித்த வண்ணம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், இந்த யானை வழிதவறி நகருக்குள் நுழைந்திருக்கலாம் என வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

