வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலி!

0
157

ஹோமாகம, மாகும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் 47 வயதான பிரதான பொலிஸ் பரிசோதகர் என பொலிஸார் தெரிவித்தனர்.