ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சிகள் இணைந்து, உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பெயர், கொள்கைத் திட்டம் என்பன எதிர்
வரும் செப்பெடம்பர் 04 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வு மஹரகமவில் நடைபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, யுதுகம அமைப்பு, எமது மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் கூட்டணியில் இணைகின்றன.
கூட்டணியின் தலைவராக விமல் வீரவன்ஸ பெயரிடப்பட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோருக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.