வெளிநாட்டிலிருந்து வந்தவர் படுக்கையில் உயிரிழப்பு!

0
5

பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் (வயது 54) என்பவராவார்.

மனைவி பிள்ளைகள் பிரான்சில் வசித்துவரும் நிலையில் மூன்று மாதத்திற்கு முன்னர் இலங்கை திரும்பிய அவர் மயிலிட்டியில் தங்கியிருந்த போது படுக்கையில் உயிரிழந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை  சடலமாக காணப்பட்டார்.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை பலாலிப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.