காத்தான்குடி-3 முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரிPன் ஜும்ஆப்பள்ளிவாயல்களில்
கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி ஆரம்பமான ஷஹீ{ஹல் புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் நேற்று இரவுடன் நிறைவு பெற்றதுடன்,ஹதீசுக்கான விளக்க உரைகள் இடம் பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.
புனித அல்குர்ஆன் மனனப் பிரிவு மதரஸாவில் ,புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவனுக்கு பள்ளிவாயல் நிர்வாகம் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்பு வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்வில் உலமாக்கள் ,பள்ளிவாயலின் நிர்வாகிகள,; முக்கியஸ்தர்கள் ,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி 5 பத்ரிய்யா ஜூம் ஆ பள்ளிவாயலிலும் ஷஹீ{ஹல் புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் இறுதி நிகழ்வு நடைபெற்றதுடன், காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 111 வது வருடமாகவும், ஜாமியுழ்ழாபிரிPன் ஜும்ஆப்பள்ளிவாயல்களில் 110 வது வருடமாகவும் ஷஹீ{ஹல் புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.