ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் விசாலமான கூட்டணியை அமைக்க உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

0
68

நாட்டில் இடம்பெறக்கூடிய எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு இலங்கையில் மிகவும் விசாலமான கூட்டணியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அமைக்க உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்து இடம்பெறும் தேர்தலில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘நாட்டில் இடம்பெறக்கூடிய எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு இலங்கையில் மிகவும் விசாலமான மற்றும் பலம்மிக்க கூட்டணியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அமைக்க இருக்கிறோம்.அதன் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற இருக்கிறது.
அன்றைய தினம் பாரிய மக்கள் கூட்டத்துடன் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியின் கன்னி பேரணி இடம்பெற இருக்கிறது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துப்படுத்தாத கட்சிகள் என பல கட்சிகள் எமது பாரிய கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன.அதேவேளை பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த பேரணியில் கலந்துகொள்வதாக தற்போதே எமக்கு அறிவித்துள்ளனர்.
அதேநேரம் சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி கட்சியை இல்லாமலாக்க சிலர் செயற்படுகின்றனர்.அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.