தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ மற்றும் அவரது வழக்கறிஞர் மீது தனியார் வங்கி ஒன்றுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் நால்ல மற்றும் கனேகொட பகுதிகளைச் சேர்ந்த 24 ,37 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கியை கொண்டு சென்றதற்காகவும், முக்கிய சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவியதற்காகவும் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.