லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து, இஸ்ரேல் தாக்குதலைத் தொடுத்துள்ள நிலையில், தமது பதில் தாக்குதலில்
இதுவரை 55 இஸ்ரேலியப் படைகள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹிஸ்புல்லா அமைப்பு
தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன், லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில், ஹமாஸூற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயற்படுகிறது.
அத்தோடு இஸ்ரேல் மீதும் ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் படைகள், லெபனானில், தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதனால் 12 இலட்சம் மக்கள் லெபனானில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலுடனான போர் தொடர்பில், ஹிஸ்புல்லா அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில், இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் 55இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20 பீரங்கிகள் மற்றும் 4 இராணுவ புல்டோசர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.