அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எச். அல் ஜவாஹிர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சம்மாந்துறை நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் ஏ.எச்.அல் ஜவாஹிர்
நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் மரண விசாரணை டிப்ளோமாவை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்ததோடு, ஆங்கில ஆசிரியராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாக சுமார் 14 வருட காலம் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.