அவுஸ்திரேலிய வாழ்க்கையை அந்நாட்டு விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக, அவுஸ்திரேலிய விழுமியங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகள் குறித்த புதிய அறிவிப்பை அவுஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட குடிவரவுத் தொடர்பான இந்த அறிவிப்பில், ஆஸ்திரேலிய விழுமியங்களையும அடிப்படைகோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்துவிதமான விசா விண்ணப்பத்தாரர்களும் கையெழுத்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த விழுமயங்களில் சுதந்திரம், மரியாதை, சமத்துவம், சட்டத்திற்கு கட்டுப்படுதல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
அவுஸ்திரேலிய அரசு குறிப்பிடும் விழுமியங்கள்:
1.தனி மனித சுதந்திரம்
2. மத சுதந்திரம் (எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதற்ம்கான உரிமை உள்ளடங்க), பேச்சு சுதந்திரம், மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை
3. அனைத்தும் விதமான மக்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்
4. நாடாளுமன்ற ஜனநாயகம்
5. பாலினம் , பாலின நாட்டம், வயது, இயலாணுதல்மை, இனம், தேசிய அல்லது இனக்குழுப் பூர்வீகம் ஆகியவற்றை கடந்து அனைத்து மக்களுக்குமான வாய்ப்பில் சமத்துவம் பேணுதல்
பின்வரும் அம்சங்களை உள்ளடக்கும் அனைவருக்குமான நியாயமான வாய்ப்பு : பரஸ்பர மதிப்பு, சகிப்புத்தன்மை, தேவையில் இருப்போருக்கான கருணை, அனைவருக்குமான சம வாய்ப்பு தேசிய மொழியாகவும், ஆஸ்திரேலிய சமூகத்தினை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான கூறாகவும் ஆங்கிலம் மொழி திகழும் ஆகியவை புதுப்பிக்கப்பட்ட கூற்றில் முக்கிய விழுமியங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன