வெடுக்குநாறி மாலை ஆதி சிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூசை வழிபாடுகளைச் செய்வதற்காக சென்றிருந்த ஆலய பூசகர்,மற்றும் பக்தர்கள் மீது பொலிசார்
அடாவடித்தனம் நடத்தியமை பழைய செய்திதான். எமது வாசகர்களுக்கு அது பழைய செய்தி தான் என்றாலும், அதுபற்றி இப்போது எழுதுவதற்கு என்ன
இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான், அதுபற்றி நீண்ட நாட்களுக்கு பின்னர் எழுத ஆரம்பிக்கின்றபோது உங்கள் மனதில் இவ்வாறு கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதுதான். ஆனால்,
இப்போது அதாவது இருபது நாட்களுக்கு பின்னர் தான் நமது ‘இமாலய பிரகடனக்காரர்கள்’ அது பற்றி வாய்திறந்திருக்கின்றனர்.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையே எப்போதும் முறுகல் நிலை நீடிப்பதற்கு முக்கிய காணம் இந்த பௌத்த துறவிகள்தான் என்பது விவாதத்திற்கு உரியதல்ல. ஆனால், அவர்களோடு சேர்ந்து இலங்கையில் இனங்களுக்கிடையே – மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நமது உலகத் தமழர் பேரவை முன்வந்தபோது, ஆரம்பத்திலேயே அதனை கேளவிக்கு உள்ளாக்கியிருந்தோம்.
அது வேறு எதற்காகவும் அல்ல, அப்படியொரு நல்ல முயற்சியை செய்கின்றபோது எதற்காக வெளிப்படைத்தன்மை இல்லா மல் இரகசியமாக ஒருசிலர் மாத்திரம் இந்த முயற்சியை செய்தீர்கள் என்பதே எமது பிரதானமான கேள்வியாக அப்போது இருந்தது.
ஆனால், அதுபற்றி பகிரங்கப்படுத்தினால், ஆரம்பத்திலேயே சிலர் அதனை கெடுத்து விடுவார்கள் – அதாவது முளையிலேயே கிள்ளிவிடுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அவர்களின் இமாலய பிரகடனத்தில் எதுவும் குறிப்பிடப்பட்டாவிட்டாலும், போர்க்குற்றம் குறித்த விசாரணை பற்றியும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றியும் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்போவதாக கூறப்பட்டது.
இப்போது அதனை முன்னெடுப்பதற்காக மாவட்டம்தோறும் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. நல்லதுதான். பெரிய ஆரவாரங்களுடனும் நாடுதளுவிய பிரசாரங்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இப்போது மிக மெதுவாக என்றாலும் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அதுவல்ல, எமக்கு இன்று எழுகின்ற கேள்வி, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்காக சென்ற பூசகர், மற்றும் பக்தர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது பொலிசார் அடாவடித்தனங்களை செய்ததைத் தொடர்ந்து வவுனியா பகுதி, குற்றிப்பாக நெடுங்கேணி ஒருபோராட்டக் களமாக மாறியிருந்தது.
தொடர்ச்சியாக அங்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த இந்த இமாலய பிரகடன குழுவினர் – குறிப்பாக இதில் உள்ள பௌத்த துறவிகள், இருபது நாட்கள் கழித்து அறிக்கை வெளியிடுவதற்கு ஏதேனும் விசேட காரணங்கள் இருக்குமோ தெரியவில்லை.
சம்பவம் நடைபெற்ற உடனேயே, அரசின் முக்கிய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, பொலிசார் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக பகிரங்கமாகவே
தெரிவித்திருந்தார்.
ஆனால் அப்படி பொலிசார் அடாவடித்தனத்தில் ஈடுபட்டபோதிலும், அந்த விவகாரம் குறித்து நீண்டநாட்களாக இமாலய பிரகடன காரர்கள் அமைதியாக இருந்தமை ஏன் என்பதும் பலருக்கும் கேள்வியாகமனதில் இருக்கலாம். பௌத்த துறவிகளுடன் இணைந்துதான் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புபவர்கள் பலர். ஆனால், அவ்வாறு உலகத்தமிழர் பேரவையுடன் இணைந்த பௌத்த துறவிகள் பற்றி பல்வேறு கேள்விகன் இருந்தன.
பலரும் அவர்கள் பற்றிய நம்பகத்தன்மையை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த நம்பிக்கையீனத்தை உறுதிசெய்வதாகவே இப்போது அவர்களின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது.
நொந்துபோயிருக்ம் தமிழ் மக்களுக்கு அவர்கள் மயிலிறகால் எண்ணை தடவுவதுபோல் தடவ முற்பட்டிருப்பதையே அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இருந்தாலும், அவர்கள் எதையோ செய்ய முன்வருகிறார்கள். செய்வதற்கு விட்டால்தானே செய்வார்கள் என்று அப்போது சில நண்பர்கள் ஆலோசனை
வழங்கினார்கள்.
சரி இன்னும் காலம் இருக்கிறதுதானே. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு காலம்தாழ்த்தி அறிக்கை வெளியிட்டதற்கு பதிலாக மக்கள் வீதிகளில் நின்ற
போது அவர்களும் வந்து நின்றிருந்தால், இன்னும் நமக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கும்.
நேற்று டான் ரிவி அலுவலகத்திற்கு வந்திருந்த தமிழ் அரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.அ.சுமந்திரனை தற்செயலாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஐந்தாம் திகதி என்ன நடக்கும்?’ என்று அவரிடம் கேட்டேன். அதாவது எதிர்வரும் ஐந்தாம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் தமிழ் அரசு கட்சி
தொடர்பான வழக்கு அழைக்கப்படவிருக்கின்றது.
அதனையே அவரிடம் கேட்டிருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், ‘அங்கே கட்சிக்காரர்கள் எல்லோரும் ஒன்றாக நிற்போம்’ என்று, அவர் கட்சிக்காரர் என்று கூறியமை, வழக்கில் எதிராளிகள் என்று பெயர்குறிப்பிடப்பட்ட கட்சிக்காரர்களை மட்டும்தானா அல்லது, வழக்கை தாக்கல்செய்த கட்சிக்காரர்களையும் சேர்த்தா என்பது தெரியவில்லை.
ஆனால், அவர் எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டவர்களை மட்டும்தான் சொன்னார் என்றாலும் கூட, எல்லோரும் ஒற்றுமை
- ஊர்க்குருவி.