ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஆலோசனையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அந்த நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்தாரென செய்தி கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு ஆதரவு இருக்கின்றதா அல்லது இல் லையா என்பது ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பின்னர்தான் அறிய முடியும் – எனவே, அது தொடர்பான முன்கூட்டிய கணிப்புகள் அர்த்த மற்றவை. இது தவிர, தமிழ் மக்கள் எவ்வாறான மனநிலையில் இருக் கின்றார்கள் என்பதை சம்பந்தனால் எவ்வாறு அறிய முடிந்தது? ஏனெனில், சம்பந்தன் அவரின் சொந்தத் தொகுதியான திருகோண மலைக்கு கடந்த மூன்று வருடங்களாக செல்லவில்லை.
இது தொடர் பில் திருகோணமலை தமிழ் மக்கள் என்ன கருதுகின்றார்கள் என்பதையே சம்பந்தனால் அறிய முடியவில்லை.
சம்பந்தன் இவ்வாறு கூறினாரென செய்தியொன்று வெளியானதைத் தொடர்ந்து – சம்பந்தனால் இவ்வாறு கூறியிருக்க முடியுமா – அந்தள வுக்கு அவர் தெளிவாக இருக்கின்றாரா என்னும் கேள்வியே எழுந்தி ருக்கின்றது. ஏனெனில், அந்தளவுக்கு சம்பந்தன் அரசியல் விடயங்களி லிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றார். சம்பந்தன் தெளிவாக சிந்திக்கக்கூடிய நிலையில் இருந்திருந்தால் இலங்கை தமிழ் அரசு கட்சியை நீதிமன்றம் செல்ல விட்டிருக்கமாட்டார்.
சம்பந்தன் தெளி வான நிலையில் இருந்திருந்தால் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலை வர் தெரிவுக்கான போட்டியும் நடைபெற்றிருக்காது. தற்போதுள்ள நிலையில் சம்பந்தன் அரசியல் தீர்மானமற்ற ஒரு மனிதராகவே இருக்கின்றார்.
அவரின் கருத்துகளை செவிமடுக்கும் நிலையில் அவரின் கட்சியும் இல்லை – மக்களும் இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான், சம்பந்தனின் கருத்துகளை நோக்க வேண் டும். இந்தப் பின்புலத்தில் நோக்கினால், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான உரையாடல் களை, மக்கள் மனு – வடக்கு, கிழக்கு சிவில் சமூகக் குழுவே முன்னெ டுத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் ஏகோபித்த ஆதரவை பெற்று வெற்றி பெற்றிருந்த (அது தற் போது நெருக்கடியில் இருக்கலாம்) சிவஞானம் சிறீதரன் உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த விடயத்தை முன்கொண்டு செல்வ தற்கான செயல்பாடுகள் எவையும் இதுவரையில் முன்னெடுக்கப்பட வில்லை.
மக்கள் மனு சிவில் சமூகம் விடயத்தை பேசு பொருளாக்கும்
கருமங் களையே முன்னெடுத்து வருகின்றது. அனைத்து கட்சிகளும் ஓரு புள்ளியில் சந்தித்தால் மட்டுமே, இந்த விடயம் சாத்தியப்படும் இல்லா விட்டால் தமிழ் பொது வேட்பாளர் எண்ணக்கரு ஒரு தோல்வியடைந்த நிலைப்பாடாகவே இருக்கும்.
ஆனால், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் என்பது இயலாத காரிய மல்ல – முயற்சித்தால் சாத்தியப்படுத்தக்கூடிய விடயம்தான். இவ்வா றானதொரு முயற்சி தென்னிலங்கையில் இனவாத சக்திகளை கிளர்ந் தெழச் செய்யும் என்று கூறும் வாதங்கள் அர்த்தமற்றவை ஏனெனில், இவ்வாறான முயற்சிகள் இல்லாவிட்டாலும்கூட, தென்னிலங்கையின் கடும்போக்கு தரப்புகள் அமைதியடைந்து விடப்போவதில்லை. என்பது பொருளல்ல.
அவர்கள் தேவைப்படும்போது, வெளியில் தமிழர் விரோத நிலைப்பாட்டோடு முகம் காட்டுவதை எவராலும் தடுக்க முடியாது.
அது இலங்கைத் தீவின் ஓர் அரசியல் போக்கு. சம்பந்தன் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடானது ஒருவேளை, அவர்களின் தனிப்பட்ட ஈடுபாடுகளுக்கு முரணாக இருக்கலாம். அதனால் அவர்களில் சிலர் இதனை வெளிப் படையாக ஆதரிக்கத் தயங்கலாம். அதற்காகத் தமிழ் பொது வேட்பாளர் எண்ணக்கரு தவறானதல்ல. அது பரிசோதிக்கக் கூடியதுதான்.