இலங்கையின் உயரமான மனிதர்?

0
161
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இலங்கையின் மிக உயரமான நபர் என்று தெரிவித்துள்ளார் .பிபிசி சிங்கள சேவைக்கு பேட்டியளித்துள்ள புதுக்குடியிருப்பு கைவேலியில் வசிக்கும், குணசிங்கம் கசேந்திரன் ஏழு அடி இரண்டு அங்குல உயரம் கொண்டவர்.
இலங்கையில் தான் உயரமானவர் என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையில் எங்கும் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை பெற முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான கஜேந்திரன், தனது உயரம் காரணமாக பேருந்தில் தான் சாதாரணமாக பயணிக்க முடியாது என்றும் தான் முச்சக்கர வண்டி ஓட்டுநராக பணிபுரிவதால் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே முச்சக்கர வண்டியை செலுத்துவதகவும் தெரிவித்துள்ளார்.