28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடரை நடத்த முன்மொழிவு!

2024 ஆம் ஆண்டில் சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு செலாவணி ஈட்டலை அதிகரித்தல், உறுப்பு நாடுகளுக்கிடையில் இலங்கையின் தெங்கு தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கும், தெங்குத் தொழிற்துறையிலுள்ள பிரதான பங்குதாரர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் தெங்குத் தொழிற்துறையில் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் குறித்த கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles