ஹமாஸ் அமைப்பால் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட, 6 இஸ்ரேலியர்கள், கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்ரேலில் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால், அங்கு பதற்றமான நிலை நீடிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்டு, பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் 6 பேரின் உடல்களை, தெற்கு காசா பகுதியில் இருந்து, இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது. ஹமாஸூன் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல் அவில் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள், பணயக் கைதிகளை மீட்க, இஸ்ரேல் பிரதமர் தவறிவிட்டதாக, கோசம் எழுப்பினர்.
பிரதான வீதிகளை இடைமறித்த போராட்டக்காரர்கள், இஸ்ரேல் நாடாளுமன்றை நோக்கி பேரணியாகச் சென்றனர். பேரணியை கட்டுப்படுத்த இஸ்ரேல் பொலிஸார் முயற்சித்த போது, இரு தரப்புக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.இதனால் இஸ்ரேலில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.