நடப்பாண்டிற்கான ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொல்கத்தா அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 61ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கம்மின்ஸ் 53 ஓட்டங்களைச் சேர்க்க, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 148 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா – டீகாக் இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர்.
ரோகித் சர்மா 35 ஓட்டங்களில் வெளியேற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் டீகாக் 78 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன் மூலம் குறித்த அணி 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.