ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா – திணறும் அமெரிக்கா

0
258

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்காவில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 101,461 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா இருந்து வருகிறது.

தற்போது அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 985 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வரும் செவ்வாய்க்கிழமை அங்கு ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்கம் வேகம் எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்கு தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஜனாதிபதி டிரம்பின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.