திருகோணமலை கன்னியாவில் அமைந்துள்ள வெந்நீரூற்று இந்துக்களின் தொல்பொருள் அடையாள சின்னமாகும்.
இதற்கும் வரலாற்று தொன்மைமிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
இவைகள் திருகோணமலையில் சிவ வழிபாட்டை ஆதாரப்படுத்தும் அடையாளங்களாகும்.
அதிகரித்திருக்கின்றது.
பிறிதொரு புறம் வரி விதிப்புக்கு எதிராக, இன்று முதல் தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழில்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
ஆனால், கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அமைந்துள்ள இந்துக்களுக்கு சொந்தமான ஆலயமொன்றை புனரமைக்க முற்பட்டவேளையில், அப்பகுதி பிக்குவின் தலையீட்டால் நெருக்கடிகள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள அடையாளங்கள் அநுராதபுர காலத்தின் பௌத்த வழிபாட்டுக்கு உரியதென்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 2011இல் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானிக்கு அமைவாக குறிப்பிட்ட இடம் பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
எனினும் இந்தப் பகுதியின் நிர்வாகம் பிரேதச சபையின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்தது.
பின்னர் சிறிது காலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
எனினும், உத்தியோகபூர்வமாக வெந்நீரூற்றின் நிர்வாகம் பிரேதச சபைக்கு உட்பட்டதாகவே இருந்தது.
இந்த நிலையில் கன்னியா வெந்நீரூற்று தற்போது திருகோணமலை தொல்பொருள் திணைக்களத்தின் வருமான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு
வரப்படுவதாக திணைக்களம் ஊடக அறிக்கையொன்றின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றது.
இதன் மூலம் கன்னியா வெந்நீரூற்றிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானங்கள் அனைத்தும் நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளது.
இங்கு விடயம் வருமானமல்ல – மாறாக, கன்னியா வெந்நீரூற்றின் நிர்வாகம் முற்றிலும் மத்திய அரசின் கீழ் கொண்டுசெல்லப்படவுள்ளது.
ஏற்கனவே, குறித்த பகுதியின் கட்டுப்பாட்டை முற்றிலுமாக பிரேதச சபை இழந்திருக்கும் நிலையில், தற்போது வெந்நீரூற்றின் நிர்வாகமும் உத்தி யோகபூர்வமாக தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சென்றுவிட்டது.
இனி அந்தப் பகுதியில் பிரேதச சபை எந்தவொரு தலையீட்டையும் முன்னெடுக்க முடியாது.
திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தையும் இவ்வாறானதொரு நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்துடனேயே விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநரும் இந்த விடயத்தில் கூடுதல் ஆர்வத்தை காண்பித்திருந்தார்.
எனினும், விடயம் பல்வேறு மட்டங்களில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொல்பொருள் திணைக்களம் சற்று பின்வாங்கி அமைதியானது.
குறிப்பாக இந்திய தூதுவர் திருக்கோணேஸ்வரத்துக்கு சென்று விடயங்களை மேற்பார்வை செய்திருந்தார்.
பின்னர் அமெரிக்க தூதுவரும் ஒருமுறை சென்றிருந்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்துக்களின் ஆலயமொன்றின் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதான பார்வை, சர்வதேசளவில் முன்வைக்கப்பட்டது.
இதனால் விடயம் நிறுத்தப்பட்டது.
ஆனால், முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதென்று கூறிவிட முடியாது.
தற்போது திருகோணமலை இந்துக்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியின் நிர்வாகம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்னும் சில வருடங்களில் கோணேஸ்வர ஆலயத்தின் மீதும் இவ்வாறானதோர் அணுகுமுறை முன்னெடுக்கப்படலாம்.
அப்பகுதியை உல்லாசப் பயணிகளுக்கானதாக பிரகடனப்படுத்திவிட்டு அந்தப்பகுதியின் நிர்வாகத்தை ஒன்றில் உல்லாசத்துறை அல்லது தொல்பொருள் திணைக்களம் தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரலாம்.
கன்னியா தொடர்பில் பல கண்டன அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன.
அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் பேசியிருக்கின்றனர்.
கூடவே, இந்து அமைப்புகள் என்போரின் கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
வடக்கிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கலாக ஒரு முறை பேரணியும் நடத்தியிருந்தனர்.
தற்போது, திருகோணமலை தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லாத நிலையில் யாரால் இது தொடர்பில் பேச முடியும்?