கொரோனா இரண்டாவது அலை கடும் எச்சரிக்கை

0
195

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலக நாடுகளை மொத்தமாக புரட்டி எடுக்கும் என சீன அரசாங்கத்தின் முக்கிய மருத்துவ ஆலோசகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று தொடர்பாக சீன அரசாங்கத்தின் முக்கிய மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வருபவர் டாக்டர் ஜாங் நன்ஷன் . இவரே தற்போது, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து தமது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை தற்போது உலகின் பல நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.

ஆனால் கண்டிப்பாக இரண்டாவது அலை கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்று வருவதாலேயே, இரண்டாவது அலையின் தாக்கம் சீன மக்களை பாதிக்காது என்றார் அவர்.

இருப்பினும் சீனாவில் பெருந்தொற்றின் பாதிப்புகள் இருப்பதாகவும், அது இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளில் இதுவரை 45 மில்லியன் மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளானதாக குறிப்பிட்டுள்ள அவர்,

அடுத்த சில மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். இங்கிலாந்தில் மட்டும் ஒக்டோபர் 17 முதல் 23 வரையான காலகட்டத்தில் சுமார் 568,000 மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக கூறும் டாக்டர் ஜாங் நன்ஷன், இதன் முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகம் என்றார்.