கொரோனாத் தொற்றினைக் கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இது குறித்து ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கும். எனவே அத்யாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சரியான நடைமுறையை கையாள்வது அவசியம் எனத் தெரிவித்தார்.
அத்துடன் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோனாத் தொற்றினைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை உடல நாடுகள் எடுக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.