30 C
Colombo
Thursday, November 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோட்டா கோ கமவின் வெற்றி பிரகடனம் வெளியீடு!

இலங்கைப் பிரஜைகளான நாங்கள் தெற்காசியாவிலேயே மிகவும் அதிகார பலமும் ஊழல் மிக்கதுமான அரசியல் வம்சத்தை ஆட்சியிலிருந்து துரத்தியுள்ளோம். நாட்டின் அடையாளமாக ஒரு புதிய தலைமுறையை நாங்கள் ஸ்தாபித்துள்ளோம். அமைதி, அன்பு மற்றும் மீண்டெழுதலுடன் உலகிற்கான ஒரு உதாரணத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் எங்கள் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் வெற்றிப் பிரகடணம் செய்துள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் மக்களாகிய நாம்இ நாடு முழுவதிலுமாகவுள்ள வீதிகளிலும் கோட்டா கோ கமவிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் சமூகங்களோடு ஒன்றபட்டும் நின்று கோட்டா கோ கம 2022 இயக்கத்தின் வெற்றியை இத்தால் பிரகடனம் செய்கிறோம்.

எங்களைப் பிரித்து வேறாக்கும் சாதி, இனம், மதம், பாலினம் மற்றும் மொழி எனும் எல்லைகளை ஏற்று மதிக்கும் அதேவேளை, எங்களை மனிதர்களாக மற்றும் இலங்கையர்களாக்கும் பொதுவான தன்மைகளைக் கொண்டாடியபடி ஒரு காலத்தின் அழைப்பு மற்றும் மாற்றம் பற்றிய ஒரு நம்பிக்கையின் கீழ் நாங்கள் ஓரணியாகத் திரண்டோம். இன்று அந்த மக்கள் போராட்டத்தின் முக்கியமான மைல்கல்லாக அமைந்த வெற்றியை நாங்கள் அறிவிக்கின்றோம்.

இணையம் மற்றும் புதிய ஊடகம் என்பவற்றுடன் வளர்ந்த புதிய தலைமுறையினராகிய நாங்கள் வன்முறைகளற்ற நடவடிக்கைகளின் பலத்தை அறிவோம். ஏமாற்றம் அடைந்த இளைஞர்களின் இரத்தத்தில் நனைந்து, மக்கள் எழுச்சிகளின் தோல்விகளை மட்டுமே கண்ட வரலாறு கொண்ட நாட்டில் நாங்கள் மீண்டெழுந்தோம்; வன்முறையற்ற மக்கள் வெற்றியை நோக்கி இலங்கையை நாங்கள் வழி நடத்திச் சென்றோம். படைப்பாற்றலை முன்னிறுத்தினோம். இப்பொழுது இலங்கை மக்களின் போராட்டத்தை ஒரு புதிய ஒளியில் மீளெழுதுகிறோம்.

அனைவருக்குமான ஒரு மத்திய கட்டளைத் தலைமையை அல்லது அடுத்து என்ன செய்யவேண்டுமென எமக்குச் சொல்வதற்கான தலைவர்களை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இருந்தும் குறித்த எழுச்சி மிகுந்த தருணங்களின் கோரிக்கைகள் எம்மை ஒன்றிணைந்து செயலாற்ற வைத்தன.

எங்களைப் பிளவுபடுத்திய பல தசாப்தகால விரோதங்கள், இன, மத வேறுபாடுகள் மற்றும் ஏனைய தடைகளை சில சமயங்களில் வெற்றியோடு தாண்டியும் சில சமயங்களில் அவை உருவாகமல் முன்னெச்சரிக்கையோடு செயற்படவும் முயற்சித்தோம். அவர்கள் எங்களுக்கிடையில் ஒற்றர்களை அனுப்பினார்கள் குண்டர்களை ஏவினார்கள். எங்களை அழிக்க முகவர்களை அனுப்பினார்கள். அதுமட்டுமின்றி எங்களது சொந்த மக்களையே எங்களிற்கு எதிராகத் திருப்பினார்கள்; அவர்களில் சிலர் சாதாரண உடையிலும்இ சிலர் சீருடையிலும் ஊடுருவினர். இருந்தும் இதை மீறி நாங்கள் நிலைத்து நின்றோம்.

அடக்குமுறைகளின் கண்ணீர்க் குண்டுகள் எங்கள் கண்களில் கண்ணீரைக் கொண்டு வருகையில் நாங்கள் ஒன்றாய் எதிர்த்து நின்றோம். நாங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டும் ஒருவரையொருவர் பாதுகாத்தும் கொண்டோம். அதேசமயம் நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துரீதியாகச் சண்டையிட்டுக் கொண்டோம். தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

சமூக – அரசியல் நிலை மாற்றத்தினை மக்களை ஒழுங்கமைத்தல் மற்றும் அதற்காகச் செயற்படுதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கிக் கொண்ட முறை மூலமாக நாம் சக இலங்கையர்களின் இதயம், மனம் மற்றும் உடலில் நாங்கள் இணைந்தோம். அது எங்கள் அனைவருக்குமான இடமாக காலிமுகத்திடலை மையமாகக் கொண்டு ‘கோட்டாகோகம’ என அறியப்படலாகியது. எங்களது கூட்டுக் கனவுகளிலிருந்து ஒரு கிராமத்தை அங்கே நாங்கள் கட்டி எழுப்பினோம். அங்கே ஊழல் அரசியலின் அதிகார எல்லைகளை நாங்கள் தாண்டினோம். எங்களை அடக்கியொடுக்கும் தலைவர்கள் தொடர்ச்சியாக இதைப் புரிந்து கொள்ளத் தவறினர்.

கோட்டாகோகம என்ற ஒரு எண்ணக்கரு நிகழ்ந்திராதவிடத்து ஒரு மாற்று எதிர்காலத்தைப் பற்றி ஒரு சில கணங்களுக்கேனும் நாங்கள் கற்பனை செய்து பார்த்திருப்போமா? இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிற் கூட மத்திய வங்கி இன்னமும் மோசமான மோசடிகளை நிகழ்திக்கொண்டே இருந்தத்து. இலங்கையைக் கட்டுப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த குடும்பமும் இன்னமும் தொடரந்துகொண்டே இருந்திருக்கும் மக்கள் அதிகாரத்திற்கான நம்பிக்கை ஒரு அந்நிய எண்ணக்கருவாகவே இருந்திருக்கும்.

ஆனாலும் இலங்கைப் பிரஜைகளான நாங்கள் இந்த அசாத்தியமற்றவைகளைச் சாத்தியமானதாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.தெற்காசியாவிலேயே மிகவும் அதிகார பலமும் ஊழல் மிக்கதுமான அரசியல் வம்சத்தை ஆட்சியிலிருந்து துரத்தியுள்ளோம். நாட்டின் அடையாளமாக ஒரு புதிய தலைமுறையை நாங்கள் ஸ்தாபித்துள்ளோம். அமைதி, அன்பு மற்றும் மீண்டெழுதலுடன் உலகிற்கான ஒரு உதாரணத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இது தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தவர்கள் ஈட்டிய வெற்றியாவாகும். இது கடும் மழை, காற்று மற்றும் வெய்யிலில் நூறு நாட்களையும் தாண்டிப் போராடியவர்கள் தங்கள் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வந்து எங்கள் அனைவரையும் ஊக்கப்படுத்திப் போராடிய அனைத்துத் தாய்மார்களுக்கான என அனைவரதும் வெற்றி. ஒன்றாக நின்று முன்னேறிச் சென்று, ஒரு தண்ணீர்ப் போத்தலைப் பகிர்ந்து கொண்டு அல்லது கரிசனையுடன் அழைப்பை எடுத்து நலம் விசாரித்த அனைவருக்குமான வெற்றி. இந்தப் போராட்டத்துக்கு வருகை தந்த அனைவருக்குமான வெற்றி. நாங்கள் எதனை வெற்றி கொண்டு சாதித்தோம் என்பதை நாங்கள் மறந்து விடாதிருப்போம்.

வரலாறு மீண்டும் மீண்டும் எழுதப்படக் கூடியதென்பதை இப்போது மீண்டும் நாங்கள் அறிந்தள்ளோம். மக்கள் இல்லாது வரலாறு படைக்கப்பட முடியாது. கோட்டாகோகம என்பது தனியே ஒரு இடம் மட்டுமல்ல. அது வரலாற்றில் ஒரு தருணமும் எங்களின் ஒரு கூட்டுச் சிந்தனைக்கான ஒரு நகர்வுமாகும்.

போராட்டம் தொடர்கிறது. ஒரு அடக்கு முறையாளரிடமிருந்தது மற்றொருவருக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கானது அல்ல அது; மக்களை மதிக்கும் ஒரு தேசத்தைப் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட அப் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்.

நாங்கள் புதிய இலங்கையர்கள் மற்றும் நாங்கள் இங்கே இருக்கிறோம்.

போராட்டத்திற்கு வெற்றி! என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles