சமுர்த்தி சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய மட்ட சங்கங்கள் அரச கணக்காய்வின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் – பந்துல குணவர்தன

0
74

நுண்நிதி வசதிகளை ஊக்குவிப்பதற்காக 1,092 சமுர்த்தி சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் 335 சமுர்த்தி சமுதாய மட்ட வங்கிச் சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இயங்குகின்றன.

சமுர்த்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய மட்ட சங்கங்கள் ஆண்டுதோறும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவால் கணக்காய்வு செய்யப்படுவதுடன்,தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வுக்கு உட்படுதல் அவசியமென சமுர்த்தி அபிவிருத்திச் சட்ட ஏற்பாடுகளில் குறிப்பிடப்படவில்லை.

சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய மட்ட சங்கங்கள் அரச கணக்காய்வு அலுவலகத்தால் கணக்காய்வு செய்யப்படுவதன் மூலம் அவற்றின் செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையாகப் பேணுவதற்கும், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தை அதிகரிப்பதற்கும் இயலுமை கிட்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.அதற்கான ஏற்பாடுகளை விதித்து 2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டத்தின் திருத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சமுர்த்தி சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும், அதற்காக, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.