28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீன ஜனாதிபதி மேலும் 15ஆண்டுகள் பதவியில் நீடிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல்!

தற்போதைய சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மேலும் 15ஆண்டுகள் பதவியில் நீடிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வரும் சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மா சேதுங்குக்குப் பிறகு கட்சியின் அதிகாரமிக்க தலைவராக 67 வயதான ஸி ஜின்பிங் இப்போது வளர்ந்துள்ளார்.

ஆண்டு மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்தியக் குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சார்பில் மத்தியக் குழு உறுப்பினர்கள், ஜனாத்பதி ஸி ஜின்பிங்கின் செயற்பாடுகளை மதிப்பிட்டனர்.

தொடர்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஸி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் (2021-2025) ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதில், உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்வைத்த முக்கிய யோசனை என்றும் தெரிய வந்துள்ளது.

ஸி ஜின்பிங், ஜனாதிபதி பதவி தவிர, கட்சியின் பொதுச் செயலர் பதவி, இராணுவத்தின் தலைமைப் பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளார்.

அத்துடன் இந்த அறிவிப்பின் மூலம் ஆயுள் முழுவதும் அவர்தான் இப்பதவிகளில் இருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் முடியும்போது அவருக்கு 82 வயதாகும். அதற்கு முன்னதாகவே அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஸி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022ஆம் முடிவடைய இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles