கொழும்பு, ஜம்பெட்டா வீதி, நியூன்ஹம் சதுக்கத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.அடையாளம் தெரியாத இரு மோட்டார் சைக்கிள் துப்பாக்கிதாரிகள் பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறைச்சிக் கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.