மிகவும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷான் கானரி அவரது 90 வது வயதில் உயிரிழந்ததாக அவரது குடும்பம் அறிவித்துள்ளது.
பஹாமசில் இருந்தபோது, இரவு நேர தூக்கத்தில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார்.
பல திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த நடிகரான ஷான், ஆஸ்கர் விருது, இரண்டு பாஃப்தா விருதுகள், மற்றும் மூன்று கோல்டன் கிளோப் விருதுகளை பெற்றிருக்கிறார்.
தி ஹண்ட் ஃபார் ரெட் அக்டோபர், இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ருசேட் மற்றும் தி ராக் ஆகியவை ஷான் கானரி நடித்த சில பிரபலமான திரைப்படங்கள் ஆகும்.