தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 156 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

0
239

முப்படையினரால் கண்காணிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 156 பேர் இன்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்குச் சென்றனர்.


கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் இதுவரை 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 2601 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.