28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தலதாமாளிகாவ தந்திரோபாயம்

நாட்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதார பின்னடைவுக்கு ராஜபக்ஷக்களே பொறுப்புக் கூறவேண்டுமென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது தொடர்பில் – நேற்றைய தலையங்கத்தில் பார்த்தோம்.
,ந்தத் தீர்ப்பை தொடர்ந்து, மகிந்த ராஜபக்ஷ உடனடியாகவே, கண்டி தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – என்று, வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றார்.
சிங்கள தேசியவாதத்தின் காவலர்களாக தங்களை காண்பித்துக் கொள்பவர்கள் அனைவருமே, அவர்கள், அரசியல் ரீதியில் நெருக்கடிகளை சந்திக்கும்
போதெல்லாம், உடனடியாகவே தஞ்சமடைவது, பௌத்த தலங்களில்தான்.
அங்கிருந்துதான் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதுண்டு.
யுத்த வெற்றியை தொடர்ந்து, ராஜபக்ஷக்கள், தங்களை வெல்ல முடியாதவர்களாக காண்பிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர்.
சகோதரர்கள், பின்னர் தங்களுடைய பிள்ளைகள் – என ,லங்கைத் தீவை தொடர்ந்தும், ராஜபக்ஷக்களின் குடும்ப அதிகாரத்திற்குள் கட்டுப்படுத்தி வைப்பதே அவர்களது ,லக்காக ,ருந்தது.
,ந்த ,லக்கை அடைவதற்கு ,ரண்டு துருப்புச் சீட்டுக்களை பயன்படுத்தினர்.
ஒன்று விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான யுத்த வெற்றிவாதம் – அடுத்தது, பௌத்தத்தின் ஏகபோக காவலர்களாக தங்களை நிறுவுவது.
,ந்த அடிப்படையில்தான், கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிப் பிரமாணத்தை அநுராதபுரத்திலுள்ள ருவன் வெலிசாயவில் மேற்கொண்டார்.
சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, தன்னை ஒரு சிங்கள பௌத்த தலைவனாக பிரகடனம் செய்தார்.
மேற்படி ,ரண்டு துருப்புச் சீட்டுக்களுமே சாதாரண சிங்கள மக்களை எக்காலத்திற்கும் சிறைப்படுத்தி வைப்பதற்கு பயன்படுமென்றே ராஜபக்ஷக்கள் எண்ணினர்.
அந்த அடிப்படையிலேயே தங்களின் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொண்டனர்.
ஆரம்பத்தில் அவர்களது வியூகம் அவர்கள் எதிர்பார்த்தது போன்றே அவர்களுக்கு தொடர் வெற்றியை கொடுத்தது.
பொருளாதார நெருக்கடி உச்சமடைந்ததை தொடர்ந்தே, ராஜபக்ஷக்களின் தென்னிலங்கை செல்வாக்கு சரிந்தது.
,ந்த நிலையில் தங்களுடைய செல்வாக்கை மீளவும் தூக்கி நிறுத்துவதன் ஊடாக மட்டுமே, தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தோற்கடிக்க முடியுமென்று கருதுகின்றனர்.
,ந்த பின்புலத்தில்தான், தலதாமாளிகாவ வழிபாடுகளிலிருந்து, மீளவும் தங்களுடைய பயணத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் வியூகமொன்றை ராஜபக்ஷக்கள் வகுக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புத்த பெருமானின் பொருளாதார தத்துவங்களை புறக்கணித்தமையின் காரணமாகவே – நாடு திவாலாகியதாக கூறுகின்றார்.
,ந்தப் பின்புலத்தில்தான், தற்போது ,ந்த வங்குரோத்து நிலைக்கு ராஜபக்ஷக்களே காரணமென்று ,லங்கையின் உயர் நீதிமன்றம் கூறியிருக்கின்றது.
ஒரு நாட்டில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேல் எதுவுமில்லை.
ஆனாலும் அதனை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று மகிந்த கூறுகின்றார்.
எவர் என்ன கூறினாலும் – சிங்கள – பௌத்த கட்டமைப்புக்கள் தங்களுடன் நின்றால், எதனையும் தங்களால் சமாளிக்க முடியுமென்றே ராஜபக்ஷக்கள் கருதுகின்றனர்.
அதனடிப்படையில் தங்களின் மீள் எழுச்சிக்கான புதிய பாதை ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றனர்.
அவர்களது மீள் எழுச்சி சாத்தியப்படுமானால், ,லங்கையின் அரசியல் நிலைமைகள் பெரும் குழப்பகரமான சூழ்நிலையொன்றை எதிர்கொள்ளும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles