26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: குஷ்பு கைது

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார்.

மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க. அறிவித்திருந்தது.

ஆனால், சிதம்பரத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவதற்காக சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அவரை முட்டுக்காடு அருகே வழிமறித்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அதேபோல, போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவனை ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறை கைதுசெய்துள்ளது.

“பெண்களின் கண்ணியத்திற்காக இறுதிவரை போராடுவோம். பிரதமர் நரேந்திர மோதி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் பேசுவார். நாங்கள் அவர் பாதையில் செல்கிறோம். சில சக்திகளின் அராஜகங்களுக்கு அடிபணிய மாட்டோம்” என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் “வி.சி.க. கோழைகள். மகிழ்ச்சியடையாதீர்கள். இது உங்கள் தோல்வி. நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சக்தி என்பதால்தான் கைதுசெய்யப்பட்டுள்ளோம். நாங்கள் அடிபணிய மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

தங்களை கைதுசெய்திருப்பது அரசின் கையாலாகாத்தனம் என கே.டி. ராகவன் கூறியிருக்கிறார். “இந்து மதத்தை இழிவு படுத்திய திருமாவளவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய சிதம்பரம் செல்லும் குஷ்பூ அவர்களையும், என்னையும் கைது செய்திருப்பது அரசின் கைலாகாத்தனத்தை காட்டுகிறது.” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சிதம்பரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க., வி.சி.க.வைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

BBC

Related Articles

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...

சாராஜஸ்மின் குறித்த மரபணுபரிசோதனை அறிக்கையை ஏற்கமுடியாது- அருட்தந்தை சிறில்காமினி

சாராஜஸ்மினின் மரபணுபரிசோதனைகுறித்த அறிக்கையை  ஏற்க முடியாது என அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார். சாராஜஸ்மின் என அழைக்கப்படும் புலத்சினி மகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய...

மிருசுவில் கொலை தொடர்பில் மூவர் கைது!

கொலை தொடர்பாக மகன்கள் உட்பட மூவர் கைது!! தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...

சாராஜஸ்மின் குறித்த மரபணுபரிசோதனை அறிக்கையை ஏற்கமுடியாது- அருட்தந்தை சிறில்காமினி

சாராஜஸ்மினின் மரபணுபரிசோதனைகுறித்த அறிக்கையை  ஏற்க முடியாது என அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார். சாராஜஸ்மின் என அழைக்கப்படும் புலத்சினி மகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய...

மிருசுவில் கொலை தொடர்பில் மூவர் கைது!

கொலை தொடர்பாக மகன்கள் உட்பட மூவர் கைது!! தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும்...

முன்னாள் எம் பி சரவணபவனால் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

தமிழர் தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக நாளை சனிக்கிழமை சங்கானை சந்தை முன்பாக காலை 9.30 மணிக்கு அறவழியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...