28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று(23) நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சி, கடந்த 2008ஆம் ஆண்டு அது முடிவுக்கு வந்ததனையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகரான காத்மாண்டுவில் நேற்று(23) மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது. ஏராளமான மக்கள் ஒன்று கூடிய இப்போராட்டத்தில் ஈடுபட்டுச் சென்ற பேரணி, பொலிஸாரால் தடுத்து நிறுத்தியதையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் போராட்டம் வெடிக்காமல் தடுக்கும் நோக்கில் காத்மாண்டுவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளூர் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சில பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தை முன்னின்று நடத்திய பிரபல தொழிலதிபரான துர்கா பிரசாயின் வீடு அமைந்துள்ள காத்மாண்டுவின் பக்தாபூரில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிரதமரின் வீடு, குடியரசுத் தலைவர் மாளிகை உள்ள இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles