29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்
தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறுவர்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் மலர்ச் செண்டுகள் வழங்கி அழைத்து வரப்பட்டனர் .
இறைவணக்கத்துடன் இலங்கை மற்றும் போர்த்துகல் நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
பறங்கிய சமூகத்தினரின் பாரம்பரிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பிரதம விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டதோடு, சிறப்பு விருந்தினர்களாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி, கல்லடி 243 வது இராணுவ கட்டளை அதிகாரி சந்திம குமாரசிங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அருட்தந்தை,போர்த்துக்கல் நாட்டு தேசிய கலாசார நிலைய குழுவினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உதவி திட்டங்கள் தொடர்பான ஆவண ஒளிப்பதிவுகள் மற்றும் பறங்கியர் சமூகத்திலிருந்து
பல்கலைகழகத்திற்குத் தெரிவான மாணவர்கள், தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தரா தர சாதாரண தரப் பரீட்சையில்
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
கலாசாhர நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
போர்த்துக்கல் நாட்டு தேசிய கலாசார நிலைய குழுவினரால் இறுவட்டொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles