2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் நாளை பிரான்ஸில் தலைநகர் பெரிஸில் ஆரம்பமாகவுள்ளன.
இதன் ஆரம்பமாக பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை
வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு சென்றுள்ளது.
அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.