பிரான்சின் தெற்குப் பிராந்தியமான நீஸ் நகரின் மத்தியில் அமைந்துள்ள பசிலிக் நோத்ர டாம் தேவாலயத்தில் இன்று காலை 9.00 மணி கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் மூவர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவர் ஆலயத்திற்குள்ளும் ஒருவர் அருகிலுள்ள தேநீர்ச்சாலையிலும் பலியானதாக தெரியவருகின்றது.
உறுதிப்படாத முதற்கட்ட தகவல்களில் இந்தத் தாக்குதல் பயங்கரவாத தாக்குல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நீஸ் நகர மேயர் கிறிஸ்ரியன் எஸ்ற்றோசி (Christian Estrosi)தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அந்த தருணத்தில் தாக்குதல்தாரி அல்லாவோ அக்பர் என கூக்குரலிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரான்ஸ் அதிபர் நீஸ் நகர் நோக்கி விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 86 பேர் பலியாகியதும் 458 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 16 அக்டோபர் பேராசிரியர் தலைவெட்டிக்கொல்லப்பட்டதையடுத்து பிரான்ஸ் முஸ்லிம்களின் பயங்கரவாத தாக்குதலின் இலக்காக உள்ளதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.